News Just In

5/08/2023 04:34:00 PM

சமூகப் பங்குபற்றுதல் ஊடாக நிலைமாற்றமும் செயற்படுதலும் திட்டம்





-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சமூகப் பங்குபற்றுதல் ஊடாக நிலைமாற்றமும் செயற்படுதலும் திட்டம் அமுலாவதாக அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் அலுவலர் அனுலா அன்ரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் பெற்றோரையும் பிள்ளைகளையும் உள்ளடக்கி ஒருங்கிணைத்த வகையில் இச்செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

வவுணதீவு பிரதேச சபை கேட்போர் கூடத்தில் திங்களன்று 08.05.2023 இடம்பெற்ற இந்த அறிமுக விழிப்புணர்வுக் கலந்துரையாடல் நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட இளவயதினரின் பெற்றோர் சுமார் 25 பேர் கலந்து கொண்டனர்.

நிகழ்வைத் துவக்கி வைத்து பெற்றோர் மத்தியில் தெளிவுபடுத்திய யுனிற்றி லங்கா நிறுவனத்தின் அலுவலர் அனுலா, இள வயதினர் மத்தியில் நெறிப்படுத்தல் மிக அவசியமாக உள்ளது. அதன் காரணமாக இளம் பராயத்தினருக்கு வேறாகவும் பெற்றோருக்கு வேறாகவும் என்றில்லாமல் பெற்றோரையும் பிள்ளைகளையும் ஒருங்கிணைத்த வேலைத் திட்டமாக இது அமைந்துள்ளது.

இந்த ஒருங்கிணைந்த வேலைத் திட்டத்தின் கீழ் தன்னைத்தானே அறிந்து கொள்ளும் சுய விழிப்புணர்வு, தலைமைத்துவம், இடர் முகாமைத்துவம், மீள் உற்பத்திச் சுகாதாரம், சிறுவர் உரிமையும் பாதுகாப்பும் உள்ளிட்ட விடயங்களை வாழ்க்கைப் படிநிலை 3 செயற் திட்டத்தின் கீழ் பரீட்சார்த்தமாக அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே, பெற்றோர் இத்தகைய அரிய உதவு ஊக்க செயல்திட்டங்களில் சிறந்த முறையில் முழுமையாகப் பங்குபற்றி இதன் உயரிய பயன்களை அடைந்து கொள்ள வேண்டும்.” என்றார்.

சிறுவர் நிதியத்தின் நிதி அனுசரணையில் அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனம் இத்திட்டத்தை அமுலாக்கம் செய்கிறது.


No comments: