
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட சகவாழ்வை வலியுறுத்தும் இன நல்லிணக்க இப்தார் மட்டக்களப்பு யூசுபியா ஜும்மாப் பள்ளிவாசலில் திங்களன்று 17.04.2023 இடம்பெற்றது.
தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத இணைப்பாளர் ஆர். மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சகவாழ்வையும் இன நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் வகையிலமைந்த சர்வமதப் பெரியார்களின் பிரசங்கங்களும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் இஸ்லாமிய, பௌத்த, ஹிந்து, கிறிஸ்தவ சமயப் பெரியார்களும் அச்சமூகங்களைச் சேர்ந்த மாவட்ட சர்வமத அமைப்பின் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு யூசுபியா ஜும்மாப் பள்ளிவாசல்; நிருவாகத்தின்; சார்பில் நிகழ்வில் உரையாற்றிய அதன் செயலாளர் ஜாபித் மியான்டாட், இன நல்லிணக்;கத்திற்கும் சக வாழ்வுக்குமான மையப் புள்ளியாக எமது பள்ளிவாசலைச் சூழவுள்ள வளாகம் அமைந்துள்ளது. பேச்சளவில் மட்டும் நின்றுவிடாமல் நடைமுறையில் நாங்கள் நல்லிணக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
எம்மைச் சூழ வாழும் சகோதர தமிழ் சமூகத்தினர் அதிகாலை நோன்புக்கு உணவு சமைத்து வந்து எங்களை எழுப்பித் தரும் அழகிய சகோதரத்துவ மன நிலையோடு வாழ்கிறார்கள். ஆகையினால் இன நல்லிணக்கத்தழிற்கான இப்தார் நிகழ்வை இந்தப் பள்ளிவாசல் சூழலில் நடத்த ஏற்பாடு செய்தது சாலப் பொருத்தமாகும் என்றர்.
No comments: