News Just In

4/13/2023 10:54:00 AM

எரிபொருள் விற்பனை குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

எரிபொருள் விற்பனை மற்றும் சாதாரண எரிபொருள் விற்பனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த 7 நாட்களின் தரவுகளுக்கமைய, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர QR அமைப்பின் மூலம் இந்த முன்னேற்றம் காட்டுவதாகக் இன்றைய தினம் (13.04.2023) தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் 60 சதவீதத்துக்கும் குறைவாக இருந்த விற்பனை தற்போது 80சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர QR வழிகாட்டுதல்களை கடைபிடிக்காத 66 எரிபொருள் நிலையங்களைத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதையடுத்து, இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பண்டிகைக் காலங்களில் விநியோகிக்கப்படும் நாளொன்றுக்கான எரிபொருளின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், நாளொன்றில் விநியோகிக்கப்படும் 92 ஒக்டேன் பெட்ரோலின் அளவை 4,650 மெட்ரிக் தொன்னாகவும், ஒட்டோ டீசலின் அளவை 5,500 மெட்ரிக் தொன்னாகவும் அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளவும் கூறியுள்ளார்.

No comments: