News Just In

3/27/2023 10:22:00 AM

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் பணத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்!




சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை பெற்றுள்ள முதல் கடன் தவணையின் ஒரு பகுதி மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் என திறைசேரி தெரிவித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், கொடுப்பனவுகள் மற்றும் இதர அன்றாட செலவுகளை பராமரிப்பதற்கு 196 பில்லியன் ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் மொத்த வருவாய் 173 பில்லியன் ரூபாயாகும். பின்னர் 23 பில்லியன் கொண்டு மார்ச் மாதத்தைத் தக்கவைக்க போதுமானதாக இல்லை. அவற்றிற்கு மேலதிகமாக 500 பில்லியனுக்கும் அதிகமான கடனைச் செலுத்த வேண்டியுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் இரண்டு மாத சம்பளம் வழங்கப்படவுள்ளது. அதாவது மார்ச் சம்பளம் மற்றும் ஏப்ரல் சம்பளமாகும்.

சர்வதேச நாணய நிதியத்திடம் பெறப்பட்ட கடனில் ஒரு பகுதி இந்த இரண்டு சம்பளத்தை செலுத்த பயன்படுத்தப்படும் என திறைசேரி தெரிவித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

No comments: