News Just In

3/15/2023 03:05:00 PM

மட்டக்களப்பில் அஞ்சலகங்களும் மூடப்பட்டு தொழிற்சங்க எதிர்ப்பு!





- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அத்தியாவசிய பொதுச்சேவை சட்டத்தின் கீழ், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய, தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்துள்ள போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதன்கிழமை 15.03.2023 அஞ்சலகங்கள் யாவும் பூட்டப்பட்டு தொழிற் சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனால் பல்வேறு அலுவல்களின் நிமித்தம் அஞ்சலகங்களுக்கு வருவோர் தபாலகங்கள் பூட்டப்பட்டிருப்பதனால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். பொது சன மாதாந்த உதவிக் கொடுப்பனவுகளைப் பெறுவோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தபால் சேவை தொடர்பில் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அரச கூட்டுத்தாபனம் அல்லது அரச திணைக்களம் அல்லது உள்ளுராட்சி நிறுவனம் அல்லது கூட்டுறவுச் சங்கம் அல்லது அதன் கிளைகள் வழங்கும் சேவைகள் இன்றியமையாதவை என்று கருதி குறித்த வர்த்தமானி ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


No comments: