இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பான அறிக்கையை ஐ.நாவில் சமர்ப்பிப்பதற்கு தயாராகி வருவதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மார்ச் 24ஆம் திகதி வரை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவின் 137ஆவது அமர்வு இடம்பெறவுள்ளது.
இந்த அமர்வின்போதே குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுதாக சர்வதேச மன்னிப்புச்சபை கூறியுள்ளது.
இந்த சமர்ப்பிப்பில், அரசியலமைப்பு கட்டமைப்பு, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான பாகுபாடு மற்றும் சமத்துவம், அவசரகால நிலைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் பயனுள்ள உரிமைக்கான உரிமை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக தனது கவலைகளை சர்வதேச மன்னிப்புசபை முன்வைக்கவுள்ளது
No comments: