News Just In

1/26/2023 09:26:00 AM

சமாதானமும் சமூகப்பணியினால் நல்லிணக்கத்திற்காக சிவில் சமூக தலைமைத்துமிக்க பெண்களை அடையாளப்படுத்தி வழுவூட்டும் நிகழ்வு..!





(எம்.என்.எம்.அப்ராஸ்-கல்முனை நிருபர்)
சமாதானமும் சமூகப்பணி நிறுவனமானது(PCA)சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்க்காக நாடளாவிய ரீதியில் பல்வேறு செயற்ப்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது இதற்கமைய கல்முனை பிரதேசத்தில் நல்லிணக்கத்திற்காக சிவில்,சமூக தலைமைத்து வமிக்க பெண்களை அடையாளப்படுத்தி வழுவூட்டும் நிகழ்வு கல்முனையில் இன்று(24) இடம்பெற்றது.

சிவில் சமூக அங்கத்தவர்கள் என்ற அடிப்படையில் கடந்த காலங்களில் தங்களின் வகிபாகம் எவ்வாறு காணப்பட்டது ?தற்க்காலத்தில் சிவில் சமூகத்தின் வகிபாகம் எவ்வாறு காணப்பட வேண்டும் என்ற விடயமும் கல்முனை பிரதேசத்தில் நல்லிணக்கத்திற்க்கு சவாலாக காணப்படுகின்ற விடயங்களை அடையாளம் கண்டு எவ்வாறு எதிர்காலத்தில் அவற்றிக்கான சமூக முன்னெடுப்புக்கள் மேற்க்கொள்வது தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது .

கல்முனை பிரதேச நல்லிணக்கக்குழு மற்றும் அம்பாரை மாவட்ட நல்லிணக்ககுழு இணைப்பாளர் எஸ்.எல். அப்துல் அஸீஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில்,சமாதானமும் சமூகப்பணி நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் டி.ராஜேந்திரன்,அரச சார்பாற்ற நிறுவனங்களின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஐ.எல்.எம்.
இர்பான்,நிகழ்ச்சித்திட்டஉத்தியோகத்தர்களானகே.டி.ரோகினி,எம்.எல்.ஏ.மாஜீத் ஆகியோர் கலந்து கொண்டனர் .சமாதானமும் சமூகப்பணியினால் நல்லிணக்கத்திற்காக சிவில் சமூக தலைமைத்துமிக்க பெண்களை அடையாளப்படுத்தி வழுவூட்டும் நிகழ்வு..!

No comments: