News Just In

12/07/2022 08:31:00 AM

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் டிசம்பர் 06ஆம் திகதி மாலையளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதுடன், அதுமேற்கு - வடமேற்கு திசையில் இலங்கையின் வடக்கு கரையோரப் பகுதியை அண்மித்து நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அது தொடர்ந்தும் படிப்படியாக ஒரு சூறாவளியாக வலுவடைந்து வட தமிழ்நாடு கரையோரப் பிரதேசங்களை அண்டியதாக தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளை அடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் டிசம்பர் 07ஆம், 08ஆம் திகதிகளில் மழை நிலைமையும் காற்றும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேக மூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

No comments: