News Just In

12/06/2022 09:25:00 AM

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியாகிய விசேட வர்த்தமானி!




அரச ஊழியர்கள் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.இது தொடர்பான வர்த்தமானி நேற்று (05.11.2022) பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி உத்தரவு அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்குவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அனைத்து அரச ஊழியர்களும் 60 வயதை நிறைவபெற்றவுடன் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று இந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு அரசாங்க ஊழியரும் 55 வயதை எட்டிய பின்னரோ அல்லது அதற்குப் பின்னரோ அரசாங்கப் பணியில் இருந்து ஓய்வு பெறலாம்.
மேலும், ஓய்வுபெறும் உத்தியோகத்தருக்கு மாற்றீடாக ஒருவர் இல்லாத சந்தர்ப்பங்களில் அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்று மேலும் ஒரு வருடத்திற்கு 60 வயதுக்கு மேற்பட்ட அதிகாரியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

ஓய்வூதியச் சட்டத்தின் 17ஆவது சரத்து முற்றாக நீக்கப்பட்டு திருத்தத்துடன் புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

No comments: