
கல்லடி பிரதேச பாடசாலைகளின் கல்வி வளர்ச்சி தொடர்பான கலந்துரையாடல் கடந்த வெள்ளியன்று (22.12.2022) கல்வி அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
கல்வி அபிவிருத்திச் சங்க ஸ்தாபகர் சி.தேவசிங்கன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலுக்கு பிரதேசத்தின் கல்வி ஆர்வலர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்துகொண்டனர். இவர்களுடன் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ. சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் கலந்துகொண்டார். பிரதேச பாடசாலைகளின் கல்வி தொடர்பான காட்சிப்படுத்தல் (Presentation) நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிரதேச பாடசாலைகளில் சீர்செய்யவேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு நலன் விரும்பிகள் கொண்டுவந்தனர்.
அனைத்து விடயங்களையும் உள்வாங்கிய இராஜாங்க அமைச்சர் குறித்த கால எல்லைக்குள் நிவர்த்திசெய்ய அவதானம் செலுத்துவதாக குறிப்பிட்டார்.
No comments: