News Just In

12/15/2022 08:31:00 PM

சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இசைத்துறையினர் பெருமையுடன் வழங்கிய "துறைமுகத்தின் நிழல்கள் - வாத்திய இசைச் சங்கமம்"

கிழக்கு பல்கலைக்கழகம், சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இசைத்துறையினர் பெருமையுடன் வழங்கிய "துறைமுகத்தின் நிழல்கள் - இசை வாத்திய சங்கமம்" நிகழ்வு மிகப்பிரமாண்டமாக இடம்பெற்றது.

சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கென்னடி தலைமையில் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இராஜதுரை அரங்கில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி. சரண்யா சுதர்ஷன் கலந்து சிறப்பித்ததுடன், குறித்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் தங்கராசா மலர்ச்செல்வன், பேராசிரியர் சி.மௌனகுரு ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.

அதிதிகளுக்கு மலர் மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் இறை பிரார்த்தனை கீதம் இசைக்கப்பட்டு ஆரம்பமாகிய நிகழ்வில், இசைத்துறை விரிவுரையாளர் திருமதி.கிருபாஞ்சனா கேதீஸ் அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதனைத் தொடர்ந்து, சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளரின் தலைமையுரையும், இசைத்துறை தலைவரின் நிகழ்வு தொடர்பான அறிமுகவுரையும் இடம்பெற்றது.

இரண்டு பகுதிகளாக இடம்பெற்ற இசைக்கருவிகளின் சங்கம நிகழ்வில் மகா கணபதிம் பாடல், கர்நாடக இசைக்குறிப்புகள், தெலுங்கு மொழி கிருதி, சமஸ்கிருத மொழி பக்திப்பாடல், மேலைத்தேய ஸ்வத குறிப்புகள், கர்நாடக இசையை தழுவி அமைந்த அமுதே தமிழே திரையிசைப்பாடல் மற்றும் கன்னட மொழிப்பாடல் என்பன பல் வகை வாத்திய கருவிகளினால் இசைக்கப்பட்டு அனைவரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தனர்.

இந்நிகழ்வின்போது பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி. சரண்யா சுதர்ஷன் மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் தங்கராசா மலர்ச்செல்வன் ஆகிய இருவரின் சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இறுதியாக பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளின் விசேட உரையினைத் தொடர்ந்து பார்வையாளர்கள் கருத்தும், அதனைத் தொடர்ந்து நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் விரிவுரையாளருமான பிறிசில்லா ஜோர்ஜ் அவர்களின் நன்றியுரையுடன் 'Shadow of the Port' இசை வாத்திய சங்கமம் நிகழ்வு நிறைவுற்றது

இந்நிகழ்வில் இசைத்துறைத் தலைவர் கலாநிதி.நிர்மலேஸ்வரி பிரசாந்த், நடன நாடகத்துறை தலைவர் கலாநிதி.தாட்சாயினி பரமதேவன், கட்புல தொழில்நுட்பத்துறை தலைவர் கலாநிதி.சீவரெத்தினம், சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பிரதிப்பதிவாளர், பிரதி நிதியாளர், சிரேஸ்ட உதவிப்பதிவாளர், சிரேஸ்ட உதவி நூலகர், உள்ளக கணக்காய்வாளர், சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இணைப்பாளர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

No comments: