News Just In

12/19/2022 01:15:00 PM

சாப்டரின் கொலையாளி பிரையன் தோமசிற்கு அனுப்பிய குறுஞ்செய்தி - வெளியானது அதிர்ச்சி தகவல்!



வர்த்தகர் தினேஸ் சாப்டரின் கொலையாளி என கருதப்படும் நபர் கிரிக்கெட் வர்ணணையாளர் பிரையன் தோமசிற்கு சாப்டரின் கையடக்க தொலைபேசியிலிருந்து குறுஞ்செய்தி அனுப்பினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாப்டரின் கையடக்க தொலைபேசியிலிருந்து பிரையன் தோமசின் கையடக்க தொலைபேசிக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி பொரளை கனத்த மயான பகுதியிலிருந்து சாப்டர் கொல்லப்பட்ட பின்னர் அனுப்பப்பட்டுள்ளது என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என சிஐடியினர் தெரிவித்துள்ளனர் என டெய்லி நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சாப்டரை கொலை செய்தவர் இந்த குறுஞ்செய்தியை சாப்டரின் கையடக்க தொலைபேசியிலிருந்து பிரையன் தோமசிற்கு அனுப்பியுள்ளார் என கருதப்படுவதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை விசாரணைகளின் போது சம்பவம் நடந்த அன்று சாப்டரின் கார் நேரடியாக அவரின் வீட்டிலிருந்து கனத்தமயானத்திற்கு வந்தமை தெரியவந்துள்ளது.

இந்த கொலை தொடர்பில் பல ஆச்சரியமளிக்கும் விடயங்கள் வெளியாகியுள்ளன. விசாரணைகளை முன்னெடுத்துள்ளவர்கள் பல ஆச்சரியமளிக்கும் விடயங்களை வெளியிட்டுள்ளனர்.

எங்களிற்கு கிடைத்துள்ள பல தகவல்களை ஆராய்ந்து உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments: