News Just In

11/03/2022 07:43:00 AM

பாணின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

பாணின் விலை குறைப்பு தொடர்பில் கடந்த திங்கட்கிழமை (31.10.2022) அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தது.

இதற்கமைய 450 கிராம் நிறையுடைய பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாணின் விலை குறைப்பு தொடர்பில் தென் மாகாண சிறு மற்றும் நடுத்தர அளவிலான வெதுப்பக உரிமையாளர் சங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

வெதுப்பக உற்பத்திகளுக்கு அவசியமான வேறு மூலப்பொருட்களின் விலை குறைவடையாமையால், பாண் இறாத்தலின் விலையைக் குறைக்க முடியாது என தென் மாகாண சிறு மற்றும் நடுத்தர அளவிலான வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

No comments: