.jpeg)
%20(1).jpeg)
அபு அலா -
தந்தையிழந்து மிகவும் வறுமைக்கோட்டின்கீழ் கல்விகற்று யாழ். பல்கலைக்கழக கலைப்பிரிவுக்கு தெரிவு செய்யப்பட்ட முள்ளிவாய்கால் - உடையார்கட்டு பிரதேசத்தைச் இரு மாணவிகளின் உயர்படிப்பை கஷ்டமின்றி தொடர்வதற்கு இலங்கை காப்போம் தொண்டு நிறுவனம் நிதியுதவிகளை வழங்கி வைத்துள்ளது.
இலங்கை காப்போம் தொண்டு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதீப்கரன் (திலீப்) உள்ளிட்ட குழுவினர் முள்ளிவாய்கால் - உடையார்கட்டு பிரதேசத்திலுள்ள சு . சங்கவி மற்றும் த. கிந்துஜா என்ற இரு மாணவிகளின் இல்லம்தேடிச் சென்று தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் முதற்கட்டமாக இந்த நிதியுதவிகளை வழங்கி வைத்துள்ளனர்.
இதன்போது யாழ். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பிரதி அதிபர் கு.சுதாகரன், வடகிழக்கு கலைப்பிரிவு மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் த. யதுர்சனன் மற்றும் காப்போம் தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
No comments: