News Just In

11/24/2022 01:49:00 PM

தென்கிழக்குப் பல்லைக்கழகத்தில் ஹிதாயா மகளிர் கல்லூரி மாணவர்களுக்கு புவித்தகவல் தொழிநுட்ப கருத்தரங்கு ..!




(எம்.என்.எம்.அப்ராஸ்)
அக்கரைப்பற்று கல்வி வலயம் பாலமுனை அல் /ஹிதாயா மகளிர் கல்லூரியின்வேண்டுகோளுக்கிணங்க
க.பொ.த உயர்தரப்பிரிவில் புவியியல் பாடம் கற்கும்
மாணவர்களுக்கு புவித்தகவல் தொழிநுட்பம் தொடர்பான விசேட கருத்தரங்கு இலங்கை தென்கிழக்குப்பல்லைக்கழகத்தின் கலை கலாசார பீட கேட்போர் கூடத்தில் (23) புதன்கிழமை இடம் பெற்றது.

இதன் போது தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் புவியியற்துறையின் தலைவர் விரிவுரையாளர் கே.நிஜாமிர் அவர்களினால் புவியியல் கற்கையின் சமகால போக்கு, நவீன முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால தொழில்வாய்ப்புக்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன் மேலும் பல்கலைக்கழகத்துடன் பிராந்திய பாடசாலைகளின் தொடர்பின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

அத்துடன் புவியியற்துறை பேராசிரியர் எம். ஐ. எம்.கலீல் அவர்கள் க.பொ.த உயர்தர புவியியற்பாட உள்ளடக்கங்கள் மற்றும் பரீட்சை தொடர்பான விடயங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

புவித்தகவல் தொழிநுட்பம் தொடர்பாக புவியியற்துறை விரிவுரையாளர் ஏ.எல் அய்யூப் அவர்களினால்செயன்முறை விளக்கங்களுடன் விரிவுரை இடம்பெற்றது.

மேலும் இதன் போது தென்கிழக்குப் பல்லைக் கழகத்தின் புவியியற்துறையின் ஏனைய விரிவுரை யாளர்களும் கலந்து கொண்டதுடன்,இறுதியாக பாடசாலையின் புவியியற்பாட ஆசிரியர் எம். ஐ.எம்.தௌபீக் அவர்கள் பாடசாலை சார்பில்நன்றியுரையினை நிகழ்த்தினார்.

No comments: