News Just In

10/27/2022 07:24:00 AM

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சி.சந்திரகாந்தன் உத்தியோக பூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்!

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உத்தியோக பூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

நேற்றைய தினம் (26) திகதி மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திலுள்ள அவரது உத்தியோக பூர்வ பணிமனையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக தனது கடமைகளை பொறுப்பேற்று, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரனிடம் அதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களை வழங்கியுள்ளார்.
தன்னால் முடிந்த அத்தனை பணிகளையும் தனக்கு வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்த மாவட்ட மக்களுக்கு செய்துகொடுக்க எல்லாம் வல்ல இறைவனும் இயற்கையும் துணை நிற்க வேண்டுமென இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இதன்போது தெரிவித்துள்ளார்.

No comments: