News Just In

10/26/2022 01:42:00 PM

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு ! அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி



இலங்கையில் வாகன இறக்குமதி தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வாகன இறக்குமதி தொடர்பான புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சட்டபூர்வமான முறையில் பண அனுப்பல்களை ஊக்குவிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சலுகைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் குறித்த சுற்றறிக்கை ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளதுடன், தகைமை பெறுகின்ற புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உயர்ந்தபட்சம் 25,000 அமெரிக்க டொலர்களுக்கு உட்பட்டு இரண்டு சக்கர இலத்திரனியல் வாகனமொன்றும், உயர்ந்தபட்சம் 65,000 அமெரிக்க டொலர்கள் உட்பட்டு நான்கு சக்கர முழு அளவிலான இலத்திரனியல் வாகனமொன்றைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரால் அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள, புலம்பெயர் தொழிலாளர்களால் வெளிநாட்டில் வருமானமாக ஈட்டும் வெளிநாட்டு செலாவணியை இலங்கைக்கு அனுப்புவதை மேலும் ஊக்குவிப்பதற்காக கீழ்க்காணும் நடவடிக்கைகளுக்காக அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

• 2023.04.30 ஆம் திகதி வரை வாகனமொன்றை இறக்குமதி செய்வதற்காக விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிக்கும் திகதி வரைக்கும் அனுப்பப்படுகின்ற வெளிநாட்டு செலாவணியின் பெறுமதி 50% வீதம் வரை CIF பெறுமதியுடன் கூடிய இரண்டு சக்கர இலத்திரனியல் வாகனமொன்றை இறக்குமதி செய்வதற்காக அனுமதி வழங்கல்.

• 2022.05.01 ஆம் திகதி தொடக்கம் 2023.12.31 ஆம் திகதி வரை எமது நாட்டுக்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டு செலாவணிப் பெறுமதி 50% வீதம் வரைக்கும் CIF பெறுமதியுடன் கூடிய நான்கு சக்கர முழு அளவிலான இலத்திரனியல் வாகனமொன்றை இறக்குமதி செய்வதற்காக அனுமதி வழங்கல்.

No comments: