News Just In

10/26/2022 11:09:00 AM

இலிங்கநகர் கோணலிங்க மகாவித்தியாலய விவாத அணியினர் முதலாம் இடம்.!




(ஹஸ்பர்)
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு திருகோணமலை , உப்புவெளி பிரதேச சபை பொது நூலகத்தினால் நடத்தப்பட்ட உப்புவெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விவாதச் சுற்று போட்டியில் இலிங்கநகர் ஸ்ரீ கோணலிங்க மகா வித்தியாலய விவாத அணியினர் வெற்றிவாகை சூடியுள்ளனர்.

ஆறு பாடசாலைகளின் அணிகள் பங்குபற்றிய போட்டியில் முதல் சுற்றில் குலுக்கல் முறையில் எதிரணிகள் போட்டியிட்டன. இரண்டாவது சுற்றில் முதல் சுற்றில் வெற்றி பெற்ற ஒவ்வொரு அணியினரும் அதாவது மூன்று அணிகளுக்கு இடையில் போட்டிகள் நடைபெற்று, புள்ளி அடிப்படையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்கள் வழங்கப்பட்டன.

அந்தவகையில் இலிங்கநகர் ஸ்ரீ கோணலிங்க மகா வித்தியாலய அணியினர் முதலாம் இடத்தினையும், வெள்ளைமணல் அல் அக்ஸார் பாடசாலை அணியினர் இரண்டாம் இடத்தினையும், சாம்பல்தீவு சல்லியம்பாள் வித்தியாலய அணியினர் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டனர்.




No comments: