News Just In

10/26/2022 11:00:00 AM

சாய்ந்தமருது சற்குரு இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் சங்கைமிகு சர்தார் நபிக்கு சாய்ந்தமருதில் பெருவிழா.!




நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு வருடா வருடம் , சாய்ந்தமருது சற்குரு இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் சங்கைமிகு சர்தார் நபிக்கு சாய்ந்தமருதில் பெருவிழா இம்முறையும் சாய்ந்தமருது சற்குரு இளைஞர் பேரவை தலைவர் எம்.எச்.எம்.றஸான் தலைமையில் சாய்ந்தமருது மருதூர் சதுக்கத்தில் நடைபெற்றது.

அஸ்ஷேஹ், அஸ்ஸெய்யித் கலீபத்துல் ஹல்லாஜ் அப்துல் மஜீத் இப்னு அப்துல் சமத் ஆலிம் மக்கத்தார் வாப்பா (காதிரி,ரிபாயி, நக்ஸபந்தி, ஜிஸ்தி, ஜதரரூசி, ஸூபி) அவர்களின் முன்னிலை மற்றும் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அஸ்ஸெய்யித் யஹ்யா மெளலானா (ஸபீதிய்), அறிஞர் சித்தி லெப்பை ஆய்வு பேரவையின் தலைவர் சட்டத்தரணி அஸ்ஸெய்யித் மர்சூம் மெளலானா, அல்-வாஹிதிய்யா அரபுக் கல்லுரி தலைவர் எம்.எம்.சப்ராஸ் மன்சூர், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம்.தில்ஷாத், மற்றும் சாய்ந்தமருது சற்குரு இளைஞர் பேரவை செயலாளர் ஏ.எம்.அஸ்பான் (அல்-கெளஸி) ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வின் பிரதம பேச்சாளராக அக்கரைப்பற்று நூருல் இர்பான் அரபுக்கல்லூரி அதிபர் மௌலவி ஏ.சி.எம். நிஷாத் (ஷர்க்கி) கலந்து கொண்டதுடன் தெல்லங்க கெலிஓயா ஜும்மா பள்ளி பேஷ் இமாம் எம்.எம். முஹம்மத் (அல் கௌஸி) சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டார்.

மேலும் சாய்ந்தமருது சற்குரு இளைஞர் பேரவை பொருளாளர் சி.எம்.எம்.சப்னாஸ், சற்குரு இளைஞர் பேரவையின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஏ.எம்.ஹாஜீப் மற்றும் உறுப்பினர்கள், சற்குரு மகாமின் முக்கியஸ்தர்கள், நிர்வாகிகள், என பலரும் கலந்து கொண்டனர்.


No comments: