News Just In

9/07/2022 08:45:00 PM

கல்முனை பிரதேச செயலக அணி அமோக வெற்றி




(சர்ஜுன் லாபீர்)

கல்முனை பிரதேச செயலகத்திற்கும், சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கும் இடையில் இன்று (07) சினேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டி கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற கல்முனை பிரதேச செயலக அணி முதல் களத்தடுப்பில் ஈடுபட சாய்ந்தமருது பிரதேச செயலக அணி முதலில் துடுப்பெடுத்தாடி 10 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 141
ஓட்டங்களை பெற்றனர்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை பிரதேச செயலக அணி 5 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டினர்.

கல்முனை பிரதேச செயலக அணி சார்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.முன்சிப் ரஹ்மான் 92 ஓட்டங்களை பெற்று சிறந்த ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: