News Just In

8/25/2022 06:33:00 AM

இந்தியாவின் மிகப்பெரும் மருத்துவமனையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

ஹரியானா மாநிலம் பரீதாபாத்தில் 130 ஏக்கர் பரப்பளவில் ஏழு அடுக்கு மாடி கொண்ட பிரமாண்ட மருத்துவமனையை மாதா அமிர்தானந்தமயி மடம் உருவாக்கியுள்ளது.

சுமார் 2,600 படுக்கை வசதி கொண்ட இந்த மருத்துவமனைக்கு அமிர்தா மருத்துவமனை எனப் பெயரிடப்பட்டது.

இவ்வாறு உருவாக்கப்பட்ட இந்தியாவின் மிகப் பெரிய பன்னோக்கு மருத்துவமனையை நேற்றையதினம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இந்த மருத்துவமனையில் 2,600 படுக்கைகளில் 534 ஐசியூ பிரிவுக்கு பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையின் கட்டுமான பணிகள் 2016ஆம் ஆண்டு தொடங்கியது. கொவிட் பரவல் காரணமாக கட்டுமான பணியில் தாமதம் ஏற்பட்ட நிலையில், தற்போது வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பன்னோக்கு மருத்துவமனையில் மிகச்சிறந்த நவீன தொழில்நுட்ப வசதியோடு கூடிய ஆராய்ச்சி மையமும் உள்ளது.

இந்த மருத்துவமனையின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமை தாங்கிய நிலையில், விழாவில் ஹரியானா ஆளுநர் பன்டாரு தத்தாத்ரேயா, மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டர், மாதா அமிர்தானந்தமயி ஆகியோர் பங்கேற்றனர்.

No comments: