News Just In

7/06/2022 11:20:00 AM

இன்றைய தினம் புகையிரத சேவைகள் முடங்கும் அபாயம்!




எரிபொருள் கோரி பணியாளர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக நேற்று (05-07-2022) மாலை இடம்பெறவிருந்த அலுவலக புகையிரதம் சேவைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொடருந்து திணைக்களம் முறையற்ற வகையில் சேவையாளர்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதாக குற்றம்சுமத்தி புகையிரதம் போக்குவரத்து சேவையாளர்களில் சிலர், நேற்று பிற்பகல் முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்

அதேநேரம், கொழும்பு – கோட்டை மற்றும் மருதானை தொடருந்து நிலையங்களின் அதிபர்கள் கடமைகளில் இருந்து விலகியுள்ளனர்.

தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை காரணமாக, அவர்கள் கடமைகளிலிருந்து விலகியுள்ளதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரட்ன தெரிவித்துள்ளார்.

கடமைக்கு சமுகமளிப்பதற்காக தங்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு உரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கபடாமையால் தொடருந்து தரிப்பிட பணியாளர்கள் நேற்று காலை முதல் பணி புறக்கணிப்பை ஆரம்பித்தனர்.

இதன் காரணமாக, புகையிரதம் நிலையங்களுக்கு அனுப்பட்ட தொடருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுகின்றன.

எந்தவொரு மாலை நேர அலுவலக தொடருந்து சேவையையும், முன்னெடுக்க முடியாது உள்ளது.

உரிய வேலைத்திட்டம் தயாரிக்கப்படாவிட்டால் இன்றைய தினத்தில் 2 மடங்காக தொடருந்து சேவைகள் முடங்கக் கூடும் என நேற்றைய தினம் தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரட்ன தெரிவித்திருந்தார்.

மேலும், இதனால் அரச இயந்திரம் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் என அவர் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments: