News Just In

7/27/2022 06:18:00 AM

கோட்டாபயவுக்கு எதிராக உடனடி நடவடிக்கை! பிரிட்டனில் இருந்தும் அழுத்தம்!

போர்க் குற்றங்களுக்காக முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்ஷவை கைது செய்யவும், அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்யவும், அவர் மீதான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பிரித்தானிய கொன்சவேர்ட்டிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவருமான எலியட் கோல்பர்ன் இதனை கேட்டுக்கொண்டுள்ளார்.

சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதனை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜெனிவா உடன்படிக்கையின் கடுமையான துஷ்பிரயோகங்களுக்கு உலகளாவிய அதிகார வரம்பைப் பயன்படுத்துவதற்கு சிங்கப்பூருக்கு விருப்பம் உள்ளது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

ஆகையினால் வெளிப்படையாக, கோட்டாபய ராஜபக்ஷ செய்த குற்றங்களில் விசாரணை நடத்திய பிற அரசாங்கங்களைத் தொடர்புகொண்டு, அவர்கள் ஏற்கனவே சேகரித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தங்களை நீங்கள் பேச்சுவார்த்தை நடத்த முடியுமா என்பதைப் பார்க்குமாறு அவர் கோரியுள்ளார்.

அத்தோடு, இவரால் பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் இப்போது இங்கிலாந்தில் வசிக்கிறார்கள், உங்கள் விசாரணைக்காக அவர்களை நேர்காணல் செய்ய, உங்களுக்கு உதவ என்னால் முடிந்ததைச் செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.


No comments: