News Just In

7/05/2022 06:40:00 AM

கனடாவில் குவியும் வேலைவாய்ப்பு... மாறிய மக்களின் மனநிலை!

கனடாவில் வேலையின்மை பெருமளவில் சரிவடைந்துள்ள நிலையில், பல நிறுவனங்கள் தகுதியான ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதில் தடுமாறிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1976கு பின்னர் கனடாவில் வேலையின்மை சதவீதம் மிகக் குறைந்த எண்ணிக்கையில், 5.1% என பதிவாகியுள்ளது. இருப்பினும் பல நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியிடத்தை நிரப்ப தடுமாறி வருகின்றன.

மக்கள் கொரோனா பரவலுக்கு பின்னர் தங்களுக்கான வேலையை தெரிவு செய்வதில் அதிக கவனம் செலுத்துவதாக ஆய்வறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று பணியாற்றவும் மக்கள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. மே 24ம் திகதி வெளியான அறிக்கையில், ஏப்ரல் தொடக்கத்தில் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியது எனவும், இது கடந்த ஆண்டை விட 40 சதவீதம் அதிகம் எனவும் தெரிய வந்துள்ளது.

கனடாவில் தற்போது 1,001,100 வேலை காலியிடங்கள் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் சமூக உதவித் துறைகளில் காலியிடங்கள் 136,800 என்ற சாதனையை எட்டியுள்ளன.

கட்டுமானத்துறையில் மட்டும் 81,500 வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது. மட்டுமின்றி, 2020ம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது உதவியாளர் மற்றும் தொழிலாளர் பணிக்கான காலியிடங்கள் 97 சதவீதம் உயர்ந்துள்ளது மற்றும் காலியான தச்சர் பணியிடங்கள் 149.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

No comments: