News Just In

7/07/2022 10:01:00 AM

இலங்கைக்கு மற்றுமொரு நெருக்கடி - விமான சேவையை நிறுத்தும் துருக்கி!





துருக்கி விமான சேவைக்கு சொந்தமான விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்வதை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக பெலாரஸ் நாட்டில் இருந்து துருக்கி ஊடாக இலங்கை வரவிருந்த 19 பேர் அந்நாட்டில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான சேவையினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் பெலாரஸில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரின் தந்தையொருவர் தெரிவித்துள்ளார்.
நிறுத்தப்படும் விமான சேவை

தனது மகன் இலங்கைக்கு வர காத்திருந்த நிலையில் அவரால் வர முடியாமையினால் 7ஆம் திகதி 9ஆம் திகதி என பயணம் பிற்போடப்படுகின்றது. தன் மகனை போன்று பலர் அங்கு சிக்கியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

துருக்கிவிமான சேவை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கான சேவைகளை நிறுத்துவதற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் கூறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துருக்கி எயார்லைன்ஸ் சொந்தமான சரக்கு விமானம் திரும்பிச் செல்லவிருந்த வேளையில் விபத்துக்குள்ளானது.

விமானத்தில் ஏற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட கண்டெய்னர் ஒன்று விமானத்தின் வலது புறத்தில் உள்ள இயன்திரத்தின் மீது  மோதியது     விபத்தின் போது கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளன.



விமானத்தில் ஏற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட கொள்கலன் ஒன்று பலத்த காற்றினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. விமான நிலைய நடத்துனர்கள் சரியாக பிரேக் போடாதமையினால், ​​விமானத்தின் மீது மோதியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன் பின்னரும் விமானம் திரும்பி செல்வதற்கு தடையாக இருந்த பிரச்சினைகளை சரிசெய்து மீண்டும் பயணிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை இலங்கை அதிகாரிகள் செய்யாமல் விட்டதாகவும் கூறப்படுகின்றது.

விமானங்கள் இரத்து செய்யப்படுவதற்கு இந்த சம்பவம் ஒரு காரணமாக இருக்கலாம் என குறித்த மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விமான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமமும் மற்றொரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.

No comments: