News Just In

7/31/2022 09:59:00 AM

இலங்கை அரசாங்கம் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு உள்ள அதிகாரங்களுக்கு அமைய சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவுசெய்யப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களிலும், சுற்றுலாத்துறையால் அடையாளப்படுத்தப்பட்ட சுற்றுலா வலயங்களில் அமைந்துள்ள தங்குமிடங்கள் மற்றும் சேவைகளை வழங்கும் சுற்றுலா நிறுவனங்களிலும் வைன், பீர் போன்ற மென்மையான மதுபானங்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

கலால் கட்டளைச் சட்டத்தின் கீழ், நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு தேவையான நெகிழ்வான மூலோபாய அணுகுமுறையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு மற்றும் குளிர்பானங்களை வழங்கும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவுசெய்யப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் சுற்றுலா அதிகாரசபையால் அடையாளம் காணப்பட்ட சுற்றுலா வலயங்களில் அமைந்துள்ள சுற்றுலா ஸ்தாபனங்கள் வைன் மற்றும் பீர் விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன.

அந்த நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. அத்துடன், மென் மதுபான விற்பனைக்கு தேவையான வருடாந்த அனுமதிப்பத்திரம் 25,000 ரூபாவிற்கு உட்பட்டு விற்பனை செய்யப்படும் என தேசிய கொள்கை அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: