News Just In

7/25/2022 02:57:00 PM

மட்டக்களப்பில் தொடர்ச்சியாக 17 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் எரிபொருள் மக்களுக்கு வழங்கப்படுகிறது




(மொகமட் தஸ்ரிப் லத்தீப்)

மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வின் பணிப்புரை யில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் இலங்கை ஐஓசி நிறுவனத்தின் பெட்ரோல் நிரப்பு நிலையங்கள் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களுக்கு எரிபொருள் வழங்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் நீண்ட காலமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரி பொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் பெட்ரோல் வழங்குவது தடுக் கப்பட்டிருப்பதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர வின் கவனத் திற்கு கொண்டு வந்திருந்தார்.

இதனடிப்படையில் தற்போது இம்மாவட் டத்தில் உள்ள 15 இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலமும் 25 நிலைப்பு நிலையங்கள் மூலமும் தற்பொழுது மக்களுக்கு எரிபோல் எரிபொருள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.

அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள வாகன பதிவு இலக்கத்தின் கடைசி இலக்கம் என்ற அடிப்படையிலான எரிபொருள் விநியோகமே மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கு அமைய பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் மேற்பார்வையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

இதனடிப்படையில் இம்மாவட்டத்தில் அறுவடைக்கு காத்திருக்கும் விவசாயிகள், மீனவர்கள், கர்ப்பிணி தாய்மார் மற்றும் அரச பணியாளர் கள் மற்றும் பொது மக்கள் என்ற அடிப்படையில் இந்த எரிபொருள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன .இதுபற்றி கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் அரசாங்கம் விதித்துள்ள வாகன இலக்கங்களின் கடைசி இலக்கம் என்ற அடிப்படையில் எரிபொருளை பெற்றுக் கொள்வதன் மூலம் ஏனைய மக்களுக்கும் எரிபொருள் கிடைப்பதற்கு சந்தர்ப்பம் இருப்பதாகவும் வாகண கடைசி இலக்கங்களுக்கு மாறாக எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு எவரும் முயற்சிக்க கூடாது என்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் .

எனினும் 17 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் எரிபொருள் வழங்கி வைக்கப்படுகின்ற போதிலும் ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையங் களிளும் நீண்ட அளவிலான நீண்ட கியூ வரிசையில் வாகனங்கள் தரித்து நிற்பதனை காணக்கூடியதாக இருக்கின்றது

No comments: