News Just In

6/13/2022 06:25:00 PM

நாவற்குடா மேல்மாடி வீதியினை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பம்!

“எழுச்சி மிகு மாநகரம்” திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட நாவற்குடா மேல்மாடி வீதியினை தார் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று (13) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மாநகர சபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீட்டு நிதியின் ஊடாக மட்டக்களப்பு மாநகர சபையின் 15ம் வட்டார உறுப்பினர் ம.நிஷ்கானந்தராஜாவின் பாதீட்டு முன்மொழிவுக்கு அமைய 1.5 மில்லியன் ரூபா செலவில் குறித்த வீதியானது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

சுமார் 150 மீற்றர் நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேற்படி வீதியின் அபிவிருத்தி பணிகளை மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகர சபை உறுப்பினர்களான ம.நிஷ்கானந்தராஜா, த.இராஜேந்திரன் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.

மாநகர சபையின் நிதி மூலமான வேலைகளை நேரடியாக மாநகர சபையானது அதன் ஆளணி வளங்களை பயன்படுத்தி மேற்கொண்டு வருவதன் ஊடாக உத்தேச மதிப்பீட்டினை விட மேலதிகமாக 40 வீதத்துக்கும் அதிகமான வேலைகளை செய்யக் கூடியதாக இருப்பதோடு மேலும் ஓர் வீதியையும் அபிவிருத்தி செய்து பொதுமக்களுக்கு கையளித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.






No comments: