News Just In

5/28/2022 01:24:00 PM

சீன தூதுக்குழு ஒன்று கிழக்கு பல்கலைக்கழகத் திற்கு விஜயம் செய்தது





(மட்டக்களப்பு மொகமட் தஸ்ரிப்)
சீனக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கிவ் ஜென்கொங் (Qizheanhong) தலைமையிலான சீன தூதுக்குழு ஒன்று  கிழக்கு பல்கலைக்கழகத் திற்கு விஜயம் செய்தது  இதன்போது இந்த தூதுக்குழுவினர் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் வல்லிபுரம் கனக சிங்கத்தை சந்தித்து சீன அரசாங்கத்தின் உதவியில் கிழக்கு பல்கலைக் கழகத்தை அபிவிருத்தி செய் வது தொடர்பாக கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பின் அடிப்படையில் கிழக்கு பல்கலைக்கழகம் சீனா நாட்டு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படுவதுடன் இலங்கை மாணவர்கள் சீன பல்கலைக்கழகத்தில் மேல்படிப்புக்காக செல்லவும் சீன நாட்டு பல் கலைக் கழக மாணவர்கள் இலங்கையில் வந்து பல்கலைக்கழக கல்வியை மேற்கொள்வதற்கும் வாய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக உபவேந்தர் வல்லி புரம் கனகசிங்கம் தெரிவித்தார்.

இது தவிர இலங்கையின் பிரதான தொழில் வாய்ப்புக ளான சுற்றுலாத் துறை மற்றும் விவசாயத் துறையை முன்னேற்றுவது தொடர்பாக சீன நாட்டு தொழில்நுட்ப உதவிகளையும் சீனாவின் உதவி திட்டங்களை பெறுவதற்கும் உபவேந்தரால் முன் வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டு எதிர்காலத்தில் வழி செய்யப்படும் என்றும் சீன தூதுவர் வாக்குறுதி அளித்தார்.

இது தவிர இலங்கையின் ஐந்து இடங்களில் தற்பொழுது சீனமொழி கற்பிப்பதற்கு பல்கலைக்கழகங்களில் வசதி செய்து இருப்பது போன்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் ஆறாவது பல்கலைக்கழகமாக சீன மொழி கற்கும் வசதிகளும் செய்யப்பட இருப்பதாகவும் சீன தூதுவர் தெரிவித்து இ ன்றைய சந்திப்பின் அடிப்படையில் இந்த வாய்ப்பு கூட இருப்பதாக தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் சீன தூதுவரின் பாரி யார் இந்திய தூதரகத்தின் அரசியல் பிரிவு உத்தியோகத்தர், சீனத் தூதரகத்தி ன் மூன்றாவது செயலாளர் மற்றும் சீன வர்த்தக தூதுக் குழுவினரும் இங்கு வருகை தந்திருந்தனர்.

சீன தூதுவர் இன்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவகாரங் களுக்கானகான பிரத்தியேக அலுவலகம் ஒன்றையும் இங்கு திறந்து வைத்தார் இந்த சர்வதேச பிரிவின் ஊடாக எதிர்காலத்தில் சர்வ தேசங்களுடன் சர்வதேச பல்கலைக்கழகங்களில் தொடர்புகளை ஏற்படுத்தி மாணவர்கள் சர்வதேச நாட்டின் கல்வி உதவிகளைப் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் உபவேந்தர் வள்ளிபுரம் கனகசிங்கம் தெரிவித்தார்

இந்த சந்திப்பின்போது கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கே.பகீரத னும் சமூகமளித்திருந்தார்


No comments: