News Just In

5/27/2022 12:44:00 PM

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பம்!




சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை இன்று(வெள்ளிக்கிழமை) முதல் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றில் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

மசகு எண்ணெய் பற்றாக்குறை காரணமாக, சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள், கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், நாட்டை வந்தடைந்துள்ள எரிபொருள் கப்பலில் இருந்து இன்றைய தினம் எரிபொருளை தரையிறக்கும் பணிகள் இடம்பெறவுள்ளன.

இதையடுத்து, சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலைய பணிகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம், 6 நாட்களுக்குள் எரிபொருள் உற்பத்தி செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது, 23 ஆயிரத்து 22 மெட்ரிக் தொன் டீசல், 2 ஆயிரத்து 588 மெட்ரிக் தொன் சுப்பர் டீசல் கையிருப்பில் உள்ளது.

அத்துடன், 39 ஆயிரத்து 968 மெட்ரிக் தொன் 92 ரக ஒக்டேன் பெற்றோல், 7 ஆயிரத்து 112 மெட்ரிக் தொன் 95 ரக ஒக்டேன் பெற்றோல், 3 ஆயிரத்து 578 மெட்ரிக் தொன் ஜெடா 01 ரக எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

No comments: