News Just In

4/10/2022 12:11:00 PM

100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை – மின் தடைப்படும் நேரம் குறையுமா ?




நாடளாவிய ரீதியில் பெய்து வரும் கடும் மழையினால் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நீர் கொள்ளளவை அதிகரிக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் நிலவும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகின்றது. இதனால், நீர் மின் உற்பத்திக்கு நல்லதென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

சமீப காலமாக, நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து, நீர்மின் உற்பத்தி தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: