News Just In

3/16/2022 10:54:00 AM

“ஒரு உயிரின் பெறுமதி ராஜபக்ஷர்களுக்கு வெறுமனே ஒரு இலட்சம் ரூபாய் மாத்திரமே”!


காணாமற்போனோரின் குடும்பத்தினருக்கு ஒருதடவை மாத்திரம் ஒரு இலட்சம் ரூபாயை வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் விசனம் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோரின் குடும்பங்கள் மரணச் சான்றிதழையோ அல்லது இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை என்றும் மாறாக அவர்கள் உண்மையையும் நீதியையுமே கோருகின்றார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

ராஜபக்ஷ அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் ஒரு உயிரின் பெறுமதி வெறுமனே ஒரு இலட்சம் ரூபாய் மாத்திரமே என்றும் இது அவமரியாதை செய்யும் வகையிலான மிகமோசமான செயல் என்றும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அரசாங்கம் எந்தவொரு தரப்பினரையும் பொறுப்புக்கூறச் செய்வதற்கான நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் மாறாக அவர்கள் உண்மையையும் நீதியையும் குழிதோண்டிப் புதைப்பதற்கே முயற்சிக்கின்றார்கள் என்றும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
S

No comments: