News Just In

3/14/2022 06:27:00 AM

கற்றல் உபகரணம் வழங்கல்!

மட்டக்களப்பு மாவட்ட ஆனந்தகிரி அறப்பணி சபையின் ஏற்பாட்டில் கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பின்தங்கிய நிலையிலுள்ள மட்/ககு/ பொண்டுகள்சேனை கணபதி வித்தியாலய மாணவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று 12.03.2022 ம் திகதி சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் ஆனந்தகிரி அறப்பணி சபையின் தலைவர் திரு.லோ.தீபாகரன் தலைமையில் நடைபெற்றது.



ஆனந்தகிரி அறப்பணிசபையின் கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை மேம்படுத்தும் முகமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் இப்பாடசாலை அதிபரும், ஆனந்தகிரி அறப்பணி சபையின் கோறளைப்பற்று பிரதேச இணைப்பாளருமான திரு.ச.வசத்தகுமார், பிரதி அதிபர் திரு.த.பஞ்சாட்சரம், ஆனந்தகிரி அறப்பணி சபையின் ஆலோசகரும், ஓய்வுபெற்ற பிரதி திட்டமிடல் பணிப்பாளருமான திரு.ச.சிவலிங்கம், செயலாளர். திரு.நே.பிருந்தாபன், உபசெயலாளர் திரு.க.செந்தூரன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச இணைப்பாளர் திரு.நே.ஜனார்த்தனன், பொதுச்சபை உறுப்பினர் திரு.ரதீஸ்குமார், பூலாக்காடு - பொண்டுகள்சேனை கிராம உத்தியோகத்தர் திரு.K.குரு மற்றும் மாணவர்களின் பெற்றோர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மாணவர்கள், நலன்விரும்பிகள் எனபலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்விற்கான அனுசரணையினை மட்டக்களப்பை சேர்ந்த தற்போது கனடாவில் வசித்துவரும் திரு.ஞானப்பிரகாசம் பிரகாந்தன் அவர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு ஆனந்தகிரி அறப்பணி சபையானது மட்டக்களப்பு மாவட்டம் முழுவதுமாக தனது பணியினை விரிவுபடுத்தி கல்வி அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி, தொழில் வழிகாட்டல் கருத்தரங்குகள், வறுமை ஒழிப்பு, இயற்கையை நேசித்தல், கலை கலாசார நிகழ்வுகளை நடாத்துதல் முதலான செய்றிட்டங்களை மாதம் ஒரு செயற்றிட்டம் எனும் அடிப்படையில் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

BIRUNTHAVAN NESATHURAI







No comments: