News Just In

3/15/2022 06:35:00 PM

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கான்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருளை பெற்றுக்கொள்வதை உடன் நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இதனை நடைமுறைப்படுத்துமாறு விநியோகிப்பதனை அனைத்து எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.

புதிய நடைமுறைகளை மீறிச் செயற்படும் விநியோகஸ்தர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

வாகனங்களுக்கு மேலதிகமாக, கேன்கள் மற்றும் பீப்பாய்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் விநியோகஸ்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


நாட்டில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏராளமான வாகனங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்கின்றன. இவ்வாறான நிலையில் பிளாஸ்டிக் கேன்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருளை கொள்வனவு செய்பவர்கள் பின்னர் அதிக விலைக்கு அவற்றை விற்பனை செய்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான மோசடியான செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments: