News Just In

3/22/2022 06:15:00 AM

அம்பாறை அரசாங்க அதிபரின் தலைமையில் பெண்களை கௌரவித்து கொண்டாடிய கிழக்கு ஆளுநர் அனுராதா யஹம்பத் !

சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 08 ஆம் திகதியை முன்னிட்டு உலகலாவிய ரீதியிலும் தேசிய ரீதியிலும் பெண்களுக்கான சமத்துவம், சம வாய்ப்பு, உரிமைகள் என்பவற்றை வலியுறுத்தி பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அதனடிப்படையில் அம்பாரை மாவட்டச் செயலகத்தின் சர்வதேச பெண்கள் தினமானது மாவட்டச் செயலாளர் ஜே.எம்.ஏ. டக்லஷ் தலைமையில் மாவட்டச் செயலகத்தின் விக்ரமரட்ன கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் இந்நிகழ்வில் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண்முயற்சியாளர்கள் ஆளுநரினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் செயற்பாடுகளில் தேசிய ரீதியில் அம்பாரை மாவட்டம் முதலாம் இடம் பெற்றுள்ளதை கௌரவித்தும் அம்பாரை மாவட்டத்தில் சிறந்த அர்ப்பணிப்பு மிக்க அரச சேவையாற்றியமைக்காகவும் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் பெண்கள் பணியகத்தின் உத்தியோகத்தர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இறக்காமம் பிரதேச செயலகத்திலிருந்து பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர். றிஸ்வானுல் ஜன்னாஹ், உளவளத்துணை உதவியாளர் ஏ.எச். றகீப், பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உதவியார் ஆர்.எஸ். றிஸ்மியா ஜஹான் ஆகியோர் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்லஷ் மற்றும் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் ஆகியோரினால் விருது வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். அதேவேளை, இறக்காமம் ஹிஜ்ரா மகளீர் சங்கத் தலைவி எஸ்.டி. நஜீமியா சிறந்த பெண் முயற்சியாளருக்கான விருதை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்லஷ் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

நூருல் ஹுதா உமர்









No comments: