News Just In

1/09/2022 07:32:00 PM

பல்லின சமுகத்தின் இன நல்லிணக்கம் நூல் வெளியீட்டு விழா!

வாழைச்சேனை எம்.ஐ.எம்.நவாஸ் (ஸலமி) எழுதிய பல்லின சமுகத்தின் இன நல்லிணக்கம் நூல் வெளியீட்டு விழா அந் நூர் தேசயிபாடசாலை பிரதான மண்டபத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

ஓய்வு பெற்ற கோட்ட கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.கே றஹ்மான் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.எம். அல்அமீன், வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்ற புலநாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ஈ.ஏ.டபள்யூ.எஸ். எதிரிசிங்க, மும்மத பெரியார்கள், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள்;, பிரதேச கலைஞர்கள், எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பல்லின சமுகத்தின் இன நல்லிணக்கம் நூலின் முதற் பிரதி பிரதம அதிதி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் மற்றும் நூலாசிரியரின் தாயாருக்கும் வழங்கி வைக்கப்பட்டதுடன், அதிதிகளுக்கும் பிறமுகர்களுக்கும் பிரதி வழங்கி வைக்கப்பட்டது.

இவ் விழாவில் நூலின் நயவுரையை கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி நடாத்தியதுடன் வாழ்த்துரையை அதிபர் எச்.எம்.எம்.இஸ்மாயில் நடாத்தியதுடுன் ஏற்புரையையும் நன்றியுரையையும் எம்.ஐ.எம்.நவாஸ் (ஸலமி) நடாத்தியதுடன் நிகழ்ச்சி தொகுப்பினை எம்.எச்.எம்.அப்ஷல் அலி வழங்கினார்.

எஸ்.எம்.எம்.முர்ஷித் 










No comments: