News Just In

12/01/2021 06:47:00 AM

ஒமிக்ரொன் கொவிட் திரிபு தொற்று உறுதியாகின்றவர்களுக்கு, வேறு வகையிலான நோய் அறிகுறிகள் தென்படுகிறது : சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே

ஒமிக்ரொன் கொவிட் திரிபு தொற்று உறுதியாகின்றவர்களுக்கு, வேறு வகையிலான நோய் அறிகுறிகள் தென்படுவதாக கொவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

புதிய திரிபு குறித்து நேற்று(30) நாடாளுமன்றில் கருத்து தெரிவித்த அவர், நோயின் பாரதூரத்தன்மை, மரணத்தை ஏற்படுத்துவதற்கான அபாயம் என்பன தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் ஆய்வுகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

சாதாரணமாக கொரோனா தொற்றின்போது, தொண்டை வலி ஏற்படுவதுடன், வாசனையை அறிய முடியாமலிருக்கும். ஆனால், இதனை விடவும் மாறுபட்ட அறிகுறிகளுடன் தென்னாபிரிக்க நாடுகளில் ஒமிக்ரொன் தொற்று ஏற்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், சிகிச்சை முறைமை மற்றும் நோயாளர்களை முகாமைத்துவம் செய்யும் முறைமை என்பனவற்றில் மாற்றமில்லை. இன்னும் ஆய்வுகள் இடம்பெறுகின்றன.

முகக்கவசம் அணிதல், இருவருக்கிடையில் ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணுதல், கைகளை தூய்மையாக வைத்திருத்தல், பொதுமக்கள் ஒன்றுகூடியுள்ள இடங்களுக்கு அவசியமற்ற முறையில் செல்வதைத் தவிர்த்தல் என்பனவற்றுடன், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்துவதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

No comments: