News Just In

12/28/2021 08:19:00 PM

பாவனையாளர்களுக்கு “லிட்ரோ” எரிவாயு நிறுவனத்தின் அறிவிப்பு


எதிர்காலத்தில் பாவனையாளர்களின் கேள்விக்கு ஏற்ப தாமதமின்றி லிட்ரோ எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கமுடியும் என்றுஅந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது.வீடுகள் மற்றும் வியாபாரத்தளங்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உடனடியாக செயற்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே இலங்கைக்கு வந்துள்ள இரண்டு எரிபொருள் கப்பல்களில் இருந்தும் நாளாந்த தேவைக்கான எரிபொருட்கள் நிரப்பப்படுவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை சந்தையின் எரிவாயுத் தேவையில் 80 சதவீதத்தை தாம் பூர்த்தி செய்வதாக குறிப்பிட்டுள்ள லிட்ரோ எரிவாயு நிறுவனம், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகள் மற்றும் மேற்பார்வையின்கீழ் எரிவாயு கலவை இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது.

No comments: