News Just In

12/01/2021 06:31:00 AM

வாழைச்சேனை ஆயிஷாவில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகள் கௌரவிப்பு!

வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (29) இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவிகளுக்கு இலங்கை பரீட்சை திணைக்களத்தால் அனுப்பி வைக்கப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன், கற்பித்த ஆசிரியர்களுக்கு பிரதேச தனவந்தர் ஒருவரின் பங்களிப்பில் பணப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்ஸாப், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.யூ.எம்.இஸ்மாயில், ஏ.எம்.ஜாபிர் கரீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

(எச்.எம்.எம்.பர்ஸான்)










No comments: