News Just In

11/18/2021 06:07:00 PM

பருவத்தே பயிர் செய்வதும் வீட்டுத் தோட்ட விவசாய முயற்சிகளில் முக்கியத்துவம் பெறுகிறது.விவசாயப் போதனாசிரியை முர்ஷிதா ஷிரீன்

எல்லாக் காலங்கிளிலும் எல்லாப் பயிர்களையும் பயிரிட்டு இலாபம் பெறலாம் என்பதில்லை அந்தந்தப் பயிர்களுக்கு பருவகாலம் இருக்கிறது. அதைத்தான் நம் முன்னோர்கள் பருவத்தே பயிர் செய் என்றார்கள் என ஏறாவூர் விவசாய விரிவாக்கல் பிரிவின் விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.

பயிர்ச் செய்கை நாட்காட்டி விநியோகமும் சேதனப் பசளை உற்பத்தியாக்கமும் என்ற தலைப்பில் வீட்டுத் தோட்டச் செய்கையாளர்களுக்கென இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

ஏறாவூர் மீராகேணி கிராமத்தில் கமக்காரர் மகளிர் சங்கப் பொருளாளரும் வீட்டுத் தோட்ட விவசாயியுமான இஸ்ஹாக் பாத்திமா துல்பிகா தலைமையில் அவரது வீட்டுத் தோட்டத்தில் நிகழ்வு புதன்கிழமை 17.11.2021 இடம்பெற்றது.

நிகழ்வில் வீட்டுத்தோட்ட கமக்காரர் மகளிர் சங்கத்தைச் சேர்ந்த மகளிர் விவசாயிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தினால் தயாரிக்கப்பட்ட பயிர்ச செய்கை வழிகாட்டியான சுற்றுச் சூழல் விவசாயப் பஞ்சாங்கமும் விநியோகிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய விவசாயப் போதனாசிரியை முர்ஷிதா ஷிரீன் பேதிய விளைச்சல் கிடைக்கவி;லலை அல்லது Nhநய்த் தாக்கங்கள் வரட்சி வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளை விவசாயிகள் எதிர்கொள்கின்றார்கள்.

நிலத்தைப் பண்படுத்துதல் பயிரிடுத்ல் பராமரித்தல் அறுவடை அறுவடைக்குப் பின்னரான தயார் படுத்தல் இவற்றையெல்லாம் அனுபவத்தின் வாயிலாக அணுகி எமது பயிர்ச் செய்கைகளை கால நேரத்தின் அடிப்படையில் மேற்கொண்டால் வெற்றியடையலாம்” என்றார்.

இந்நிகழ்வில் விவசாயத் திணைக்கள பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ரீ விமலாநந்தராஜா ஏ.எம். முபாரிஸ் என். அப்துல் காதர் உட்பட ஏறாவூர் நகர சபை உறுப்பினர் எம்.எஸ் றியால் ஆகியோரும் கலந்து கொண்டர்.

.எச்.ஹுஸைன்








No comments: