News Just In

11/22/2021 09:37:00 AM

விவசாயிகள் நடாத்திய கடுமையான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

உரம் பற்றிய பொய்யான பிரச்சாரம் செய்து நடைமுறை ரீதியில் செய்ய முடியாதவற்றை அரசாங்கம் செய்ய முயற்சித்தது. இரசாயன உர பயன்பாடு குறித்த தடையானது அரசாங்கத்தின் முட்டாள்தனத்தை பறைசாற்றிய மற்றுமொரு சந்தர்ப்பமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.

விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியமை தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், விவசாயிகள் நடாத்திய கடுமையான போராட்டத்திற்கு அடி பணிந்து கோட்டாபய அரசாங்கம்(Gotabhaya Government) இன்று இரசாயன உர தடையை தளர்த்திக் கொண்டுள்ளது.

அரசாங்கம் விவசாயிகளிடம் பாடம் கற்றுக்கொண்டுள்ளது அரசாங்கம் அநேக விடயங்களை மேலே பாய்ந்து கொண்டு ஆரம்பிக்கும் பின்னர் அந்த விடயங்களை வாபஸ் பெற்றுக்கொள்ளும்.

இரசாயன உரப் பயன்பாடு தடை குறித்து நாம் முன்கூட்டியே கூறியிருந்தோம். இதனை செய்ய வேண்டாம் என்றோம். எனினும் அரசாங்கம் அதற்கு செவி சாய்க்கவில்லை.

விவசாயிகள் நடாத்திய கடுமையான போராட்டத்திற்கு அடி பணிந்து இன்று இரசாயன உர தடையை தளர்த்திக் கொண்டுள்ளது. இரசாயன உரம் என்பது உலகில் எல்லா நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றது என மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: