News Just In

11/04/2021 06:27:00 PM

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுத் தாக்கம் தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுத் தாக்கம் வேலை இழப்புகள் கடுமையான கற்றல் நெருக்கடி மற்றும் மோசமாகும் ஊட்டச்சத்தின்மை ஆகியவற்றை அதிகரிக்கச் செய்துள்ளது என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை 04.11.2021 வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சுகாதாரம் கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பில் மனித மூலதனத்தில் அதிக மற்றும் சிறந்த முதலீடுகளை விரைவுபடுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது. இதன் மூலம் உலக வங்கியின் மனித மூலதன செயல்திட்டத்தில் இணையும் 82வது நாடாக இலங்கை உள்ளது.

இலங்கையில் வேலை இழப்புகள் கடுமையான கற்றல் நெருக்கடி மற்றும் மோசமாகும் ஊட்டச்சத்தின்மை உள்ளடங்கலாக மனித மூலதன பயன்பாட்டில் குறிப்பிடத்தக்களவு பாதிப்பினை கொவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ளது.

வறுமை மற்றும் விசேடமாக எதிர்கொள்ளும் பொறியமைப்புகளில் பற்றாக்குறை உள்ளவர்கள் மற்றும் ஏற்கெனவே பிரதிகூலமான நிலையில் உள்ளவர்களின் பாதிக்கப்படக் கூடிய தன்மை என்பன அதிகரிப்பதற்கு இவை அனைத்தும் காரணமாக அமைந்தன.

உள்ளடக்கமான பொருளாதார வளர்ச்சிக்காக மக்களில் முதலீடுகளை தூண்டுவதற்கான உலகளாவிய ஒரு முயற்சியாக மனித மூலதன செயல்திட்டம் அமைந்துள்ளது. உலக வங்கியின் மனித மூலதன செயல்திட்டம் அடுத்த தலைமுறையின் மனித மூலதனத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது.

மனித மூலதனத்தில் முதலீடு செய்யவும் பாதுகாக்கவும் உதவும் அளவீடு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு திட்டத்திற்கான அணுகலை வழங்குகிறது மற்றும் மனித மூலதன மேம்பாட்டிற்கான விரைவுபடுத்தப்பட்ட முன்னுரிமைகளை உருவாக்கி செயல்படுத்தும் நாடுகளுக்கு சக-கற்றலை உலக வங்கியின் மனித மூலதன செயல்திட்டம் ஆதரிக்கிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

.எச்.ஹுஸைன்

No comments: