News Just In

11/23/2021 03:45:00 PM

மட்டக்களப்பில் ஏற்றுமதித் தாவரக் கன்றுகள் 6000 வழங்கி வைப்பு

சிறிய அளவிலான பயிர்ச்செய்கை ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு விவசாயிகளுக்கு கறுவா கமுகு உள்ளிட்ட ஏற்றுமதித் தாவரக் கன்றுகள் மாவட்டச் செயலாளர் கே. கருணாகரன் தலைமையில் செவ்வாயன்று 22.11.2021 விவசாயிகளுக்கும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி விவசாய திணைக்களத்தினால் சிறிய அளவிலான பயிர்ச்செய்கை ஊக்குவிப்பபுத் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு விவசாயிகளுக்கு முதல் தடவையாக தலா 50 கமுகு மற்றும் 100 கறுவா மரக்கண்றுகள் என்ற அடிப்படையில் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு 200 கமுகு மரக்கன்றுகளும் 200 கறுவா மரக்கன்றுகளும் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் வேண்டுகோளின் பேரில் மாவட்ட செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.

பரீட்சாத்தமாக முதல் தடவையாக மயிலம்பாவெளி பிரதேசத்தில் கறுவா மரக்கண்றுகளும், களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் கமுகு நாற்றுமேடைகள் உருவாக்கப்பட்டு தலா 3000 கன்றுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தினால் நாற்றுமேடை உற்பத்தியாளர்களிடமிருந்து கமுகு மரக்கண்றுகள் 13 ரூபாவிற்கும், கறுவாய் மரக்கண்றுகள் 18 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

ஏற்றுமதி வவிசாயத் திணைக்களத்தின் விவரிவாக்கல் உத்தியோகத்தர் நர்தனா குகதாசனின் ஏறட்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி மாவட்ட விவசாய மேற்பார்வை உத்தியோகத்தர் சீ. தனிநாயகம் அபிவிருத்தி உத்தியோகத்தர் கேமசந்திகா உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

.எச்.ஹுஸைன்







No comments: