News Just In

11/05/2021 06:19:00 AM

5 மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 5 மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று(05) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய வடக்கு, ஊவா, மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கு நாளைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மாகாணங்களின் ஆளுநர்களினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றைய விடுமுறை தினத்திற்கு பதிலாக, எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments: