News Just In

11/30/2021 08:30:00 PM

நாட்டில் இருந்து எதிர்வரும் 3 மாதங்களுக்குள் கஞ்சாவை ஏற்றுமதி செய்வதற்கான சட்ட அனுமதியை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்!

நாட்டில் இருந்து எதிர்வரும் 3 மாதங்களுக்குள் கஞ்சாவை ஏற்றுமதி செய்ய சட்ட அனுமதியை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுதேச வைத்திய முறைகளின் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான சட்டமூலம் ஒன்றினை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் .

இதேவேளை, அண்மையில் கஞ்சா இறைவன் எமக்கு தந்தது, இதை பயிரிட்டு ஏற்றுமதி மற்றும் மருந்து பொருட்களுக்கு பயன்படுத்த வேண்டும் என பெண் எம்.பி ஒருவர் நாடாளுமன்றில் கோரிக்கை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: