News Just In

11/20/2021 07:53:00 PM

2022ம் ஆண்டுக்கான பாதீட்டில் பெரும்பங்கு ராஜபக்சர்கள் வசம்!! அம்பலத்துக்கு வந்த தகவல்!

அரசாங்கத்தின் அடுத்த வருடத்திற்கான பாதீட்டில் அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்ட ஐயாயிரத்து 200 மில்லியன் ரூபாயில் ராஜபக்சர்களின் குடும்பத்தைச் சேர்ந்த அமைச்சுகளுக்கு மாத்திரம் மூவாயிரத்து 470 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இது பாதீட்டு ஒதுக்கீட்டில் 64 வீத ஒதுக்கீடாகும் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அடுத்த வருடத்திற்கான இரண்டாம் வாசிப்பு மீதான 6ஆம் நாள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

“இந்த நாட்டை ஒன்றிணைந்து கட்டியெழுப்ப வேண்டுமெனின் என்ன செய்ய வேண்டும். இந்த நாட்டின் அரசியல்வாதிகள் வரப்பிரசாதங்களை கைவிட்டு வீதிக்கு இறங்க வேண்டும். வானத்திலிருந்து கீழிறங்க வேண்டும்.

அரசியல் எனப்படுவது வரப்பிரசாதங்களுக்கான பதவியல்ல. மக்களுடன் மக்களாக இணைந்து அவர்களின் பிரச்சினைகளை கேட்றிய வேண்டும். எனினும் உங்களால் இதனை செய்ய முடியாது.

அமைச்சரவையில் நான்கு ராஜபக்சாக்கள் இருக்கின்றனர். இராஜாங்க அமைச்சர் ஒருவர் இருக்கின்றார். அரசாங்கத்தின் அடுத்த வருடத்திற்கான பாதீட்டில் அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த செலவு ஐயாயிரத்து 200 மில்லியன் ரூபாய். இதில் ராஜபக்சர்களின் குடும்பத்தைச் சோ்ந்த அமைச்சிகளுக்கு மாத்திரம் மூவாயிரத்து 470 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்திற்கு மாத்திரம் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முழு அரச செலவில் அது 64 வீதமாகும். இதன் ஊடாக எவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட முடியும். இதன் ஊடாக எவ்வாறு ஒரு சமச்சீரான நிலைமையை ஏற்படுத்த முடியும். ஏனைய அமைச்சுகள் எலும்புகளை சூப்பிக்கொண்டிருக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது.

அமைச்சுக்களின் அவசியத்தின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் எனினும், அது இங்கு இடம்பெறவில்லை. வரப்பிரசாதங்களை கைவிட்டு இதனை மக்கள் சேவையாக கருதிச் செயற்பட வேண்டும். எனினும் அது இடம்பெறப்போவது இல்லை. அமைச்சர்களுக்கு எதற்கு காவல்துறை பாதுகாப்பு, அதிலிருந்து நாம் முதலில் வெளியேற வேண்டும். அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீடுகளை முதலில் மீளப்பெற வேண்டும். அவை அவசியமல்லை.

பெரும்பாலான அமைச்சர்களுக்கு கொழும்பில் சொந்தாமாக வீடுகள் காணப்படுகின்றன. அங்கிருந்து பணிகளை மேற்கொள்ள முடியும். இவ்வாறு அனைத்து தேவையற்ற அனைத்து செலவுகளையும் இல்லாதே செய்ய வேண்டும்” என்றார்.

No comments: