News Just In

10/27/2021 05:57:00 PM

ஞானசார தேரர் தலைமையில் 'ஒரே நாடு-ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணி : தமிழர்கள் எவரும் இல்லை !

அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரிமையின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இலங்கையினுள் ஒரே நாடு -ஒரே சட்டம் என்பதை செயற்படுத்தும் சட்ட வரைபை தயாரிக்க 13 பேரை உள்ளடக்கிய விசேட ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. இச் செயலணியின் தலைவராக பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கடகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், செயலாளராக ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச்செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

பேராசிரியர் தயானந்த பண்டார, பேராசிரியர் சாந்திநந்தன விஜயபண்டார, பேராசிரியர் சுமேத சிறிவர்தன, என்.ஜி.வ சுஜீவ பண்டிதரத்ன, மற்றும் சட்டத்தரணி இரேஷ் செனெவிரத்ன, சட்டத்தரணி சஞ்சய மாரம்பே, எரந்த நவரத்ன, பாணி வேவல, மௌலவி மொஹமட்(காலி உலமா சபை), விரிவுரையாளர் மொஹொமட் இந்திகாப், கலீல் ரஹுமான், அஸீஸ் நிசார்தீன் ஆகியோர் செயலணியில் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். செயலணியில் தமிழ் உறுப்பினர்கள் எவரும் உள்ளடங்கப்படாமை குறிப்பிடத்தக்கது. செயலணியின் செயற்பாடுகளுக்கு அனைத்து அரச உத்தியோகத்தர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளதுடன், பணிகளை நிறைவேற்றுவதற்குத் தேவையானவாறு விடயங்களை விசாரிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும் செயலணிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

செயலணியின் உறுப்பினர்கள் மாதத்திற்கொரு முறை ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கும், முழுமையான, இறுதி அறிக்கையை 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என ஜனாதிபதி செயலணிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

'ஒரே நாடு-ஒரே சட்டம் 'ஜனாதிபதி செயலணி உருவாக்கம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள வி சேட வர்த்தமானியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பில்குறிப்பிடப்பட்டுள்ளவாறு சட்டம் திருத்தல்.மற்றும் நடைமுறைப்படுத்தலும், சட்டத்தின் பாதுகாப்பும், சட்டத்தின் பாதுகாப்பும் சர்வசாதாரணமாக காணப்பட வேண்டும் என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும். அதில் இனம், மதம், குலம், பிறிதொரு காரணிகளினால் எந்தவொரு நபரும் சட்டத்தின் பாகுபாட்டிற்கும் அல்லது விசேட சலுகைகளுக்கும்  உள்ளாகக்கூடாது என்பது அடிப்படை உரிமைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இலங்கையினுள் 'ஒரே நாடு-ஒரே சட்டம்'என்ற எண்ணக்கருவை செயற்படுத்துவதானது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித விழுமியங்கள் செயற்திறகான முறையாக தென்படுகிறது.

நாட்டின் குடிமக்கள் அனைவரும் சட்டவாட்சி கோட்பாட்டிற்கு அமைய 'சட்டத்மின் முன்சமமானவர்கள்' என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நாட்டு தலைவர் என்ற ரீதியில்நான் (ஜனாதிபதி) தங்களின் விவேகம், திறமை மற்றும் நாட்டின் பற்றுறுதி என்பவற்றின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு உங்களை (செயலணியின் உறுப்பினர்களை) ஒரே நாடு-ஒரே சட்டம் என்பதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களாக நியமிக்கிறேன்.

இலங்கையினுள் ஒரே நாடு-ஒரே சட்டம் என்பதை செயற்படுத்துதல் தொடர்பாக கற்றாராய்ந்து அதற்காக சட்ட வரைபொன்றை தயாரித்தல். 'ஒரே நாடு-ஒரே சட்டம்' உருவாக்கத்திற்காக நீதி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட சட்ட வரைபுகள், மற்றும் சட்ட திருத்தங்கள் ஆகியவற்றை கற்றாராய்ந்து அவற்றின் பொருத்தம் மற்றும் தகுந்த திருத்தங்கள் இருப்பின் அதற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தலும், அதற்கு ஏற்றவாறு உரிய வரைபில் உள்ளடக்குதல். ஆகியவை நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் பணிகளாகும்.

ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொடஅத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச்செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்க செயலணியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். செயலணியின் பணிகளை நிறைவேற்றுவதற்குத் தேவையானவாறு விடயங்களை விசாரிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்கள் நியமனம் பெற்ற நாளிலிருந்து குறைந்தபட்சம் மாதத்துக்கொருமுறை எனக்கு (ஜனாதிபதி) அறிக்கை சமர்ப்பிப்பதற்கும், இறுதி அறிக்கையை 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம்  திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் செயலணியினால் ஆலோசனை வழங்கக்கூடிய அல்லது சேவைகளை வழங்குவதற்காக உதவியினை கோரக்கூடிய சகல அரசாங்க உத்தியோகத்தர்களும், ஏனைய நபர்களும் குறித்த செயற்பாடு தொடர்பில் அவற்றை பின்பற்றி ,அத்தகைய ஆலோசனைகளுக்கு அமைய செயற்பட வேண்டும்.

வழங்கக்கூடிய சகல உதவிகளையும், தகவல்களையும் வழங்க வேண்டும் என்றும் சகல அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் ஏனைய நபர்களுக்கும் பணிப்புரை வழங்குகிறேன். மேலும் அரச ஊழியர், அல்லது யாதேனும் அரச திணைக்களம், அரச கூட்டுத்தாபனம், அல்லது அரச நிறுவன உத்தியோகத்தர் ஒருவர் செயலணியால் ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்ற தாமதிக்கும் அல்லது தவறும் சந்தர்ப்பம் எல்லாவற்றையும் எனக்கு (ஜனாதிபதி) அறிய தருமாறு பணிப்புரை விடுக்கிறேன்.

No comments: