News Just In

8/08/2021 07:29:00 PM

சட்டத்திற்கு முரணாக வழக்கு தொடர்ந்தமைக்கு எதிராக ஊடகவியலாளர்களால் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு...!!


கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற போலியான நிவாரணம் வழங்கும் சம்பவம் தொடர்பிலான சிசிடிவி ஒளிப்பதிவு தொடர்பில் உப்புவெளி பொலிசாரினால் ஊடகவியலாளர்கள் இருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியால் சட்டத்திற்கு முரணான வகையில் வழக்கு தொடர்ந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருக்கோணமலை பிராந்திய அலுவலகத்தில் 06.08.2021 அன்று முறைப்பாடு வழங்கப்பட்டது.

இது தொடர்பில் ஊடகவியலாளர் கருத்து தெரிவிக்கையில், "கொரோனா பயணத் தடை அமுலில் இருந்த காலப்பகுதியில் போலியான நிவாரணம் கொடுக்கும் வகையில் டிக் டாக் வீடியோ காட்சிகளை ஒளிப்பதிவு செய்த நபர் தொடர்பில் போலீசார் நடவடிக்கை எடுக்காமல், குறித்த சம்பவம் தொடர்பில் மதகுரு ஒருவரையும் இரண்டு ஊடகவியலாளர்களையும் சட்டத்திற்கு முரணான வகையில் வழக்கு ஒன்றில் இணைத்துள்ளமை கண்டிக்கத்தக்க விடயம்" என்றனர்.

அத்துடன், கொரோனா பயணத் தடை அமுலில் இருந்த காலப்பகுதியில் டிக் டாக் செய்வதற்கு யார் அனுமதிப்பத்திரம் (Pass) கொடுத்தது? என கேள்வி எழுப்பினர். இவ்வாறான தகுதியற்ற செயல்களுக்கு அனுமதி பத்திரம் வழங்கிய அரச அலுவலர்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.


No comments: