News Just In

8/06/2021 11:37:00 AM

மட்டக்களப்பு- முதலைக்குடா ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம்...!!


மட்டக்களப்பு மாவட்டத்தின் எழில் மிகுந்த மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச சபைக்குட்பட்ட முன்னோர்களால் முதலூர் என சிறப்பித்து கூறப்படும் முதலைக்குடா கிராமத்தில் ஆலமரத்தினை தலவிருட்சமாக கொண்டு வாவிக்கரை ஓரத்தில் அமையப்பெற்றுள்ள ஆதிபராசக்தி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமானது இன்று 06.08.2021 (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி இன்று நள்ளிரவு 12 மணியளவில் திருக்கும்பம் வைக்கும் வைபவத்துடன் ஆரம்பமாகவுள்ள வருடாந்த திருச்சடங்கு உற்சவமானது தொடர்ந்து ஐந்து நாட்கள் பகல் இரவு பூசை ஆராதனைகள் இடம்பெற்று 11.08.2021 அன்று புதன்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் தீமிதித்து மதிய சக்கரை அமுதுப் பூசையுடன் ஆடிப்பூரத்தில் ஆலய வருடாந்த சடங்கு உற்சவமானது நிறைவு பெறவுள்ளது.

குறித்த சடங்கு உற்சவமானது ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ஹரிகர சர்மா தலைமையில் இடம்பெறவுள்ள பூசை ஆராதனைகளில் உற்சவ கால பிரதம குருவாக சிவஸ்ரீ நிசாந்தன் குருக்கள் மற்றும் உற்சவ கால தலைமை குரு அ.தம்பித்துரை ஆகியோரால் சிறப்பாக நடைபெறவுள்ளது.

குறித்த வருடாந்த சடங்கு உற்சவமானது நாட்டில் நிலவும் கொரோனா தொற்று அச்சநிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அடியார்களின் வரவுடன் நடைபெறவுள்ளதாகவும், சமூகம் தரும் அடியார்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறும் ஆலய நிருவாக சபையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.


No comments: