News Just In

8/26/2021 06:38:00 PM

மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து களுவாஞ்சிகுடிக்கு வந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு...!!


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து களுவாஞ்சிகுடிக்கு வந்த காட்டு யைனைகளை வனஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் செவ்வாய்கிழமை(24) மாலை உடன் ஸ்த்தலத்திற்கு விஜயம் செய்து 4 காட்டுயானைகளையும், வெடி வைத்து விரட்டி மீண்டும் மட்டக்களப்பு வாவியை கடக்க வைத்து மீண்டும் படுவாங்கரைப் பகுதிக்குக் கொடுசென்றுள்ளனர்.

மிக நீண்டகாலமாகவிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதியில் காட்டுயானைகளின் அட்டகாசங்களும். தொல்லைகளும், அதிகரித்த வண்ணமே உள்ளன. இந்நிலையில் அப்பகுதியில் இவ்வாறு காட்டுயானைகளின் தாக்கத்தினால் அப்பாவி உயிர்கள் காவுகொள்ளப்பட்டு, பயன்தரும் பல தென்னை வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள், மற்றும் வீடுளையும் அழித்து வருகின்றன.

இந்நிலையில் செவ்வாய்கிழமை(24) 4 காட்டுயானைகள் படுவாங்கரைப் பகுதியிலிருந்து மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து எழுவாங்கரைப் பகுதியில் அமைந்துள்ள களுவாஞ்சிகுடிக்கு வந்துள்ளது. காட்டு யானைகள் நகர்பகுதிக்கு வந்துள்ளமை குறித்து ஸ்ரீலங்க பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார், மற்றும் பொதுமக்களும், வன ஜீவராசிகள் திணக்கள உத்தியோகஸ்த்தர்களுக்குத் தெரியப்படுத்தியதை அடுத்து, மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் சுற்றுவட்ட அதிகாரி நா.சுரேஸ்குமார் உள்ளிட்ட குழுவினர் வருகைதந்து வெடிவைத்து விரட்டி யானைகளை மீண்டும் மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து படுவாங்கரைப் பகுதியின் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள தளவாய் காட்டுப்பகுதிக்குக் கொண்டு விட்டுள்ளனர்.

வன ஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்களுடன், ஸ்ரீ லங்கா பnhதஜன பெரமுன் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார், மண்முனை தென் எருவில் பற்றுபிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜ், மற்றும் அப்பகுதி பொதுமக்களும், இணைந்து யானைகளை விரட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.














No comments: